தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய அளவுக்கு அதிகமான உயரத்தின் மூலமாகவும் அழகின் மூலமாகவும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் நமது நடிகை மிஞ்ச ஆளே கிடையாது.
அந்த வகையில் இவர் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இரண்டு பாகத்திலும் நடிகை அனுஷ்காவிற்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் அவரை உலக அளவில் பிரபலம் அடைய செய்தது.
ஆனால் நமது நடிகைக்கு உடல் எடை கூடியதன்காரணமாக வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்த நிலையில் தீவிர உடற்பயிற்சி மூலமாக தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளார். இந்நிலையில் உடல் எடை குறைத்த பிறகு மாதவனுடன் சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படமானது மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததன் காரணமாக தட்டுத்தடுமாறி ஒரு தெலுங்கு பட வாய்ப்பை பெற்ற நிலையில் தற்போது இவருக்கு ஒரு தமிழ் திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை தலைவி திரைப்படத்தை இயக்கிய விஜய் என்ற இயக்குனர் தான் கொடுத்துள்ளார் இவர் ஏற்கனவே அனுஷ்காவை வைத்து தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் இந்நிலையில் மறுபடியும் இவர்கள் மூன்றாவது முறையாக ஒன்றினைவதன் காரணமாக மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.