தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டங்களில் இருந்த இயக்குனர்கள் பலரும் இப்பொழுதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு படங்களை எடுக்காமல் இருந்து வருகின்றனர் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் தனது திறமையின் மேல் நம்பிக்கை வைத்து கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் பி வாசு திரை உலகில் பல வருடங்களாக பல வெற்றி படங்களை கொடுத்து தற்போதும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல உச்ச நட்சத்திரங்களை வைத்து அவர் படங்களை இயக்கி வெற்றி கண்டு உள்ளார் அந்த வகையில் ரஜினி போன்ற ஜாம்பவான்கள் தொடங்கி தற்போது இருக்கும் டாப் நடிகர்களை வைத்துக் அவர் படங்களை எடுத்துள்ளார்.
பி வாசு கடைசியான நடிகர் ராகவா லாரன்சை வைத்து “சிவலிங்கா” என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க ரஜினியை வைத்து இவர் ஏற்கனவே சந்திரமுகி என்னும் ஒரு பேய் படத்தை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் மேலும் படம் எதிர்பார்க்காத வசூல் வேட்டை நடத்தியது.
அதை தொடர்ந்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல வருடங்கள் கழித்து தற்போது எடுக்கப்பட உள்ளது இந்த படத்தையும் பி. வாசு அவர்களே இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிகை இருக்கிறார் பேய் மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பதே பலரின் கேள்வி குறியாக இருந்தது.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தான் நடிக்கப் போகிறார் என்ற தகவல் சமீபகாலமாக பரவி வந்தது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் ரசிகர்களும் மக்களும் தற்போது வரை யார் என்று தெரியாமல் இருந்தனர். அதற்கு பதில் அளித்தார் இயக்குனர் பி வாசு. அனுஷ்கா நடிப்பது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை மேலும் இப்படத்திற்கு நடிப்பதற்கு பல நடிகைகளை தேர்வு செய்து வருவதாக கூறியுள்ளார் கூடிய விரைவில் அனுஷ்கா நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறினார்.