தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் உடல் எடை கூடியதன் காரணமாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியாமல் இருந்து உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கப்போகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது நமது நடிகை இவ்வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலி செட்டி நடிக்க உள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்புகள் நமது கதாநாயகனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தினை இயக்குனர் மகேஷ்பாபு அவர்கள்தான் இயக்க இருப்பதாகவும் இந்த திரைப்படமானது அனுஷ்காவின் நாற்பத்தி எட்டாவது திரைப்படமாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க உள்ள தான் காரணமாக இந்த திரைப்படத்தின் படம் அடுத்த ஆண்டு இறுதியில் திட்டமிட்டபடி வெளியிடப்போவதாக படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு அனுஷ்கா இப்படி ஒரு கதாநாயகர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.