நடிகை அனுஷ்கா ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்ததால் எடுத்தவுடனேயே தென்னிந்திய சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவே தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார்.
ஒரு கட்டத்தில் கிளாமர் கதாபாத்திரம் சென்டிமெண்ட் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுத்தார். இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. நடிகை அனுஷ்கா தமிழில் தொடர்ந்து சூர்யா, ரஜினி, விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டு இருந்தார். ஒருகட்டத்தில் சோலோ படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தன்னை நம்பி வரும் படங்களுக்காக உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதுமாக இருந்து உள்ளார். அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அதிக அளவு உடல் எடையை ஏற்றிய பின் குறைக்க முடியாமல் தள்ளாடினாள் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
உடல் எடையை குறைக்க அவரும் என்னென்னவோ செய்து தான் பார்க்கிறார் ஆனால் உடல் எடை மட்டும் குறைந்தபாடில்லை ஆனால் ஒரு சில படங்களில் கமிட்டாகி இருந்ததால் வேறு வழியின்றி நடிக்க வேண்டிய சூழ்நிலை அல்லது அந்த வகையில் பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் ஜோடி சேர்ந்து எப்படியோ அந்த படத்தில் உடல் எடையை குறைத்தது போல் vfx மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தில் நடிக்க வைத்தனர்.
தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார் இருப்பினும் பாகுபலி 1, 2 படங்களுக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தற்போது தனது சினிமா இண்டஸ்ட்ரி காணாமல் போய்விடும் என்ற பயம் அனுஷ்காவுக்கு வந்துள்ளது இதனால் பிரபல நடிகரும் முன்னாள் காதலரான பிரபாஸுடன் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார் அதாவது தனக்கு உன்னுடைய படத்தில் வாய்ப்பு தர வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஏற்கனவே கீர்த்தி ஷெட்டி, மாளவிகா மோகனன் படத்தில் இருக்க மூன்றாவது நாயகியாக அனுஷ்காவையும் சிபாரிசு செய்து தற்போது சேர்த்து உள்ளாராம் இதனை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் கூறியுள்ளார்.