மார்க்கெட்டை பிடிக்க நடிகை அஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..! நிலைமையைப் பார்த்து கைகொட்டி சிரிக்கும் ரசிகர்கள்..!

anjali-2

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி இவர் அதன்பிறகு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் பலவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்நிலையில் அவர் நடித்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படமானது அவருடைய வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்துவிட்டது இந்நிலையில் நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தார். ஆனால் திடீரென அவருடைய மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டு விட்டது.

இதன் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த நமது அஞ்சலி சமீபத்தில் பிரபல இயக்குனர்களின் திரைப்பட வாய்ப்பை கையில் வைத்திருப்பதால் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்து விடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அடுத்ததாக எப்படியாவது முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை பெற்று டாப் நடிகையாக மாறுவார் என நினைத்த நிலையில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வலம் வரும் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு நடிகை அஞ்சலி திடீரென இப்படி யோசித்ததற்கு காரணம் நயன்தாராவாக இருக்கலாமோ என அனைவரும் நினைத்து வருகிறார்கள் ஏனெனில் நயன்தாரா யோகி பாபு உடன் இணைந்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

anjali-1
anjali-1

இவ்வாறு நயன்தாராவின் வெற்றிதான் அஞ்சலியை இப்படி செய்ய வைத்து உள்ளதா என பலரும் நினைத்த நிலையில் அவர் இணையம் காமெடி நடிகர் கூட தெலுங்கு காமெடி நடிகராம். இவ்வாறு அஞ்சலி தெலுங்கு நடிகர்களுடன் நடித்து விட்டு இப்படி தமிழில் பிரபலமாக முடியும் என பலரும் குழப்பத்தில் உள்ளார்கள்.