நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாதான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்து வருகிறது அதற்கு ஏற்றார்போல சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை முதலில் வெளி காட்டினார்.
தொடர்ந்து கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டதால் ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைத்தது அதன்பின் இவர் படங்களிலும் சரி சமூக வலைதளப் பக்கங்களில் சரி தனது அழகை காட்டி வலம் வருகிறார்.
இப்போதும் தென்னிந்திய சினிமா உலகில் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக்கொண்டிருக்கிறார் தமிழ் சினிமாவில் இதுவரை இவர் நடித்த கற்றது தமிழ் எம் ஏ ஆயுதம் செய்வோம் அங்காடி தெரு எங்கேயும் எப்பொழுதும் போன்ற படங்கள் இவருக்கு பெஸ்ட் படங்களாக அமைந்தன. தமிழ் சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவரது வளர்ச்சி சிறப்பாக..
இருந்த நிலையில் மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சில சர்ச்சைகள் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனார். சில காலம் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள அஞ்சலிக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது யோகி பாபு படத்தில் இணைந்து கிளாமராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என்பது அஞ்சலியின் எண்ணமாக இருக்கிறது இந்த நிலையில் நடிகை அஞ்சலி மஞ்ச கலர் மாடர்ன் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..