தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை அந்தஸ்தை கட்டிக் காத்து வருபவர் தான் நடிகை திரிஷா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக அளவு திரைப்படங்கள் நடிக்காவிட்டாலும் இதற்கு முன்பு அவரை மிஞ்சி கொள்ள ஆளே கிடையாது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனை படைத்த வந்தது அந்த வகையில் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்.
மேலும் நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் சூர்யா விக்ரம் என அனைவருடனும் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் ரசிகர்கள் என தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் லைக்குகளையும் கமண்ட்களையும் குவிப்பது மட்டுமில்லாமல் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திரிஷா பிறந்தநாளை ஒட்டி சில சுவாரஸ்யமான உண்மைகள் இணையத்தில் வெளிவந்துள்ளது அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவை நடிகை அஞ்சலி பேட்டி எடுத்துள்ளார்.அதுவும் இந்த பேட்டி சென்னையில் உள்ள மாயாஜால் என்ற மாலில் நடைபெற்றது.
இவ்வாறு நடைபெற்ற அந்தப் பேட்டியில் நடிகை அஞ்சலி மாடல் அழகியாக கலந்துகொண்டு திரிஷாவை பேட்டி எடுத்துள்ளார் இதோ அந்த நிகழ்ச்சி நடத்தப் பட்ட புகைப்படங்கள்.