தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக இருந்தவர் நடிகை அஞ்சலி இவர் கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு, மங்காத்தா, கலகலப்பு, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் நடிகை அஞ்சலி.
ஆனால் சில காலங்களாக நடிகை அஞ்சலியின் படங்கள் சரியாக ஓடவில்லை இதற்கு காரணம் அவர் படங்களை சரியாக தேர்ந்தெடுக்காததா? இல்லை அவருக்கு மார்க்கெட் இல்லாததா? என்று பல கேள்விகள் எழுந்து இருந்தது.
தமிழில் சரிவர வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கு பக்கம் திரும்பிய நடிகை அஞ்சலி கடைசியாக ஒரு படத்தில் கிளாமர் நடனம் ஆடி இருப்பார் இந்த பாடல் இணையதளத்தில் செம வைரலானது. இதனைத் தொடர்ந்து நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் நடிகை அஞ்சலி தற்போது என்ன செய்கிறார் என்றே பலருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை அஞ்சலி சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தான் தகாத உறவில் இருந்தது தான் என்னுடையா மார்க்கெட் சரிந்ததற்கும் எனக்கு பட வாய்ப்பு வராததற்கு காரணம் என்று ஓப்பனாக கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது பிரபலம் ஒருவருடன் தான் தகாத உறவில் இருந்து வந்தேன் அப்போது எனக்கு தெரியவில்லை இந்த அளவிற்கு என்னுடைய சினிமா வாழ்க்கை சரியும் என்று. அப்போவே தெரிந்து இருந்தால் இந்த மாதிரி செய்திருக்க மாட்டேன். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு பட வாய்ப்பு வராததற்கு இதுதான் காரணம் என்று தெரிய வந்தது அதன் பிறகு அந்த உறவில் இருந்து விலகி வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.