நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இருந்து வெளியாகிய அஞ்சலியின் புகைப்படம்.!

anjali
anjali

தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நடிகை அஞ்சலி. இவர் தமிழில் வெளிவந்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இத்திரைப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது.

இதன் மூலம் தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சேட்டை உள்ளிட்ட இன்னும் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

எனவே கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு மற்ற நடிகைகள் போலவே இவரும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வந்தது.  இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜெய்யை காதலிப்பதாக கூறி பல சர்ச்சைக்கள் இருந்ததால் தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அஞ்சலி தெலுங்கில் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் அடித்து தெலுங்கு திரை உலகிலும் பிரபலம் அடைந்துள்ளார். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கொழுக்கு மொழுக்கு என கும்மென்று இருந்தார்.

எனவே திடீரென்று தனது உடல் எடையை குறைத்து ஒள்ளி குச்சியாக மாறியதால் பல ரசிகர்கள் இது உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று கூறி வந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் கொஞ்சமாவது குண்டாக இருந்தால் இன்னும் அழகாக இருப்பீங்க என்று கூறி வந்தார்கள்.

 

இந்நிலையில் தற்போது அஞ்சலி தமிழில் வெளிவந்த நேர்கொண்டபார்வை தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அத்திரைப்படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்திற்க்கு வக்கில் ஷாப் என பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்திற்காக அஞ்சலி தனது உடல் எடையை கூட்டி இருக்கிறார் அந்த வகையில் இத்திரைப்படத்தில் அந்த வேடத்தில் நடித்து உள்ளார் என்ற போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.