திருமணமான 5 மாதங்களில் குழந்தைக்கு தாயான ரஜினி பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

rajini

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஐந்து மாதங்களிலேயே குழந்தைக்கு தாயான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பட நடிகை. மேலும் சோசியல் மீடியாவில் அவர் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மிகவும் வைரலாகி வருகிறது.

பொதுவாக சினிமா என்றால் நடிகை, நடிகர்கள் ஒருவரை மட்டும் தான் திருமணம் செய்து கொண்டே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர்களுக்கு பிடித்தால் வாழலாம் இல்லையென்றால் அடுத்தடுத்து எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் பல நடிகர்கள், நடிகைகள் முதல் திருமணம் பிடிக்காமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஐந்து மாதங்களில் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமடைந்தவர் தான் நடிகை அஞ்சலி நாயர். இவர் தமிழினைத் தொடர்ந்து மலையாளத்தில் சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவர் அண்ணாத்த, மாமனிதன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் எண்ணித்துணிக உள்ளிட்ட ஏழு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anjali Nair
Anjali Nair

அஞ்சலி நாயர் கடந்த 2011ம் ஆண்டு அனிஷ் என்ற பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு தற்பொழுது 5 வயது பெண் குழந்தையும் உள்ளது இவர்களுக்கிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டின் காரணமாக 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

Anjali nagar

பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் பிரபல இயக்குனரான ஆஜித் ராஜு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகிவுள்ள நிலையில் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் ஆஜித்தை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கர்ப்பமாக இருந்துள்ளார் அதன் பிறகு தான் இவர்கள் திருமணம் செய்வதற்கான முடிவை எடுத்து உள்ளார்கள் என தெரியவருகிறது.