பட வாய்ப்பு பற்றி தனது நண்பர்கள் கேட்ட கேள்விக்கு கிறுக்குத்தனமாக பதில் அளித்த நடிகை அஞ்சலி..!

anjali
anjali

தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அஞ்சலி  இவ்வாறு திரை உலகில் ரொம்ப பிசியாக இருந்த நமது நடிகை அதன் பிறகு தன்னுடைய சொந்த பிரச்னையின் காரணமாக சினிமா பக்கமே தலை காட்டவில்லை.

இவ்வாறு கொஞ்சநாள் பிரேக் விட்டதும் போதும் அவருக்கு திரைப் பட வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இது போதாது என்று சமூக வலைதள பக்கத்தில் அவருடைய பெயரும் மிகவும் டேமேஜ் ஆகி விட்டன இதற்கு முக்கிய காரணமே பிரபல நடிகர் தான் என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அஞ்சலி அந்த வகையில் தற்போது வக்கீல் சாப் என்னும் திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறந்ததாக இருப்பதன் காரணமாக நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

என்னதான் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டினாலும் இவருக்கு திரை உலகில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம் இதுகுறித்து அவருடைய நண்பர்கள்  கேள்வி எழுப்பிய போது எனக்கு தகுந்த கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக இயக்குனர்கள் தன்னை தேடி வருவார்கள் என்று கூறியுள்ளாராம்.

ஆனால் இதுவரை யாருமே வந்த பாடு கிடையாது.இந்நிலையில் எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டு மிக அழகான தோற்றத்துடன் காட்சி அளித்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது இவர் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இருந்தது போல மாறி விட்டார் என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

anjali
anjali