தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் நடிகை அஞ்சலி. இவரின் சிறந்த நடிப்பு திறமையினாலும் பப்ளிமாஸ் போன்ற உடல் அமைப்பினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் நடித்த அங்காடி தெரு திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தந்தது.இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு,சேட்டை, இறைவி, பலூன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது இவர் அஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஞ்சலி அத்திரைப்படத்திற்க்கு வக்கீல் ஷாப் என பெயரை வைத்துள்ளார்கள் இதில் ஹீரோவாக பவன் கல்யாண் நடித்துள்ளார்.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து திரை பிரபலங்களும் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் லாக் டவுன் நேரத்தை கழித்து வருகிறார்கள்.
அந்த வகையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அஞ்சலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். சமீபத்தில் இவர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஞ்சலியை விட அவர் அம்மா சூப்பரா இருக்காரு எனக் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.