அந்த விஷயத்தில் நயன்தாராவை ஓவர்டேக் செய்த 18 வயது இளம் நடிகை..! இதோ நீங்களே பாருங்கள்..

nayanthara
nayanthara

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் தற்போதும் கூட இவரது மார்க்கெட் குறையாமல் உச்சத்தில் இருக்கின்றன. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த கனெக்ட் திரைப்படம்..

கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது அதை தொடர்ந்து இறைவன், கோல்ட், ஜவான், நயன்தாரா 75 போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர  அஜித்தின் 62 ஆவது திரைப்படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்தர் நடித்திருந்தார். இவரது நடிப்பு இந்த படத்தில் சிறப்பாக இருந்தது.

தற்போது அனிகா மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மற்றும் ஒன்று இரண்டு பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அனிகா. இவர் தொடர்ந்து கிளாமர் மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு கருப்பு நிற டிரஸ்ஸில் கண்ணாடி முன்பு அமர்ந்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு  அழகில் ஜொலிக்கிறீர்கள் என கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி தெளித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

anikha
anikha
anikha
anikha