சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்து உள்ளவர்தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் பெரும்பாலும் கதாநாயகியை விடவும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தான் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதுவரையிலும் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இவர் சம்மந்தமே இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்ததால் இவரின் கேரக்டர் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. எனவே காமெடி நடிகையாக மாறி விட்டார் ஆண்ட்ரியா.
பொதுவாக மாஸ் நடிகரின் திரைப்படத்தில் நடித்தால் ஹீரோயினை விடவும் அந்த நடிகருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் அதே போலதான் மாஸ்டர் திரைப்படத்திலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மற்ற அனைத்து கேரக்டர்களும் டம்மியாக மாற்றியது.
இதன் காரணமாக ஆண்ட்ரியா இதற்குமேல் மாஸ் நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் தயாரிப்பாளர்களுக்கு விண்ணப்பம் போட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு மேல் சோலோ ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று முடிவுசெய்து தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் ஆண்ட்ரியா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சைடு போசில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.