காட்டில் 15 நாய்களிடம் சிக்கிக்கொண்ட ஆண்ட்ரியா.? மிரள வைக்கும் புகைப்படம்.

andrea
andrea

actress andrea movie teaser:நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பில் வெளியாகிய தரமணி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. மேலும் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை எஸ்எஸ் சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அழகாத்தான் இயக்கியுள்ளார், மேலும் படத்தை ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிரபுஞ்சி சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்டில் மனித நடமாட்டமே இல்லாத மலைப்பிரதேசத்தில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு நடந்துள்ளது. அடர்ந்த மலைப்பிரதேச காட்டில் இரண்டு இளம் தம்பதிகள் தங்குகிறார்கள் அங்கு மனிதர்களை குறிவைத்து வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

அந்த வேட்டையாடும் நாய்களிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த திரைப்படத்திற்காக 15 பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அதேபோல் 45 நாட்களாக சிரபுஞ்சியில் தங்கி அங்கேயே முழு படமும் படமாக்கப்பட்டு திரும்பியுள்ளது படக்குழு.

மேலும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, மும்பை சாக்ஸி ஜெயஸ்ரீ, ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல், ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவு ரமேஷ் சக்கரவர்த்தி செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜிஸ் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது படத்திற்கு நோ என்ட்ரி என டைட்டில் வைத்துள்ளார்கள்.