இந்த சுட்டி குழந்தை.. இப்போ தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை.!

andrea

சினிமா உலகில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகளின் பழைய புகைப்படங்கள் வெளிவருகின்றன.அதிலும் குறிப்பாக கல்லூரி, பள்ளி படிக்கும் பொழுது அல்லது குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட அந்த அறிய புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரை நாம் பல்வேறு டாப் நடிகர்கள், நடிகைகளின் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து வருகிறோம்.. அதுபோல தற்பொழுது இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை தற்போது மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரம் தான் அவர் யாரும் அல்ல பிரபல நடிகை ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா முதலில் பின்னணி படகியாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார் அதன் பிறகு இவரது அழகை பார்த்து பட வாய்ப்புகள் குவிந்தன ஆரம்பத்தில் தவிர்த்த ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் படத்தில் நடிக்க தொடங்கினார். முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்து போனார்.

andrea
andrea

அதன் பிறகு நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர். இப்போதும் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில் 2023ல – ல் பிசாசு 2, கா, மாளிகை, நோ என்ட்ரி, பாபு ஆண்டனி ஃபிலிம், தினேஷ் செல்வராஜ் ஃபிலிம்..

ஆகியவற்றிலும் இவர் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தையா இருக்கும் போதே செம்ம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.