Actress amy jackson : நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி, நடிகை எமி ஜாக்சன் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் டெக்ஸாஸில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார்.
அதுமட்டுமில்லாமல் இவர் 18-க்கும் மேற்பட்ட அழகிய விருதுகளையும் பெற்றுள்ளார், தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் மதராசபட்டினம் இதனை தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், தெறி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ரஜினியுடன் 2.0.
அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை, எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட அது பெரும் சர்ச்சையை உருவாக்கியது, இந்த நிலையில் எமிஜாக்சன் அவர்களுக்கும் ஜார்ஜ் பெனாய்டோ என்பவரும் பல காலமாக லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்தார்கள், இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொண்டு கடந்த மாதம் ஆண்ட்ரியா என்ற ஆண் குழந்தை எமி ஜாக்சனுக்கு பிறந்தது.
குழந்தையுடன் தற்பொழுது மகிழ்ச்சியாக நாட்களை கடந்து வருகிறார்கள் இந்த நிலையில் அவ்வபொழுது அடிக்கடி புகைப்படத்தையும் சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார், அதேபோல் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணவருடன் கொஞ்சிக் குலாவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகளிடம் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்றதற்கான அடையாளமே தெரியவில்லையே என வர்ணித்து வருகிறார்கள் எமிஜாக்சனை.
#AmyJackson pic.twitter.com/7hfoox0SSi
— Tamil360Newz (@tamil360newz) May 29, 2020