Amy Jackson: சினிமாவிற்க்கு அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில் நடிகைய எமி ஜாக்சன் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்வுடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசரப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தினை தொடர்ந்து தாண்டவம், தங்க மகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்தார். பிறகு இவர்கள் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்ட நிலையில் திருமணத்திற்கு முன்பே 2019ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் செய்துக் கொள்ள இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
தற்பொழுது எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார். இந்நிலையில் எமி ஜாக்சன் தற்பொழுது புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவுள்ளார்.
இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சனா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மேலும் இத்தாலியில் நடைபெறும் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக இது போன்று தோற்றத்தில் எமி ஜாக்சன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.