வடிவேலு நடிப்பில் வெளிவந்த தெனாலிராமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமிர்தா ஐயர். தொடர்ந்து லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, கொடிவீரன், காளி உள்ளிட்ட படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் எந்த திரைப்படங்களும் இவருக்கு சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை. பிறகு விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பிகில் திரைப்படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த கவினுடன் இணைந்து லிப்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது .
இந்நிலையில் அமிர்தா ஐயர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார். இந்நிலையில் அமிர்தா ஐயர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் முதல் முறையாக 30 நாளில் காதலிப்பது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு காதல் திரைப்படம் என்பதால் முதல் முறையாக அமிர்தா லிப் லாக் அடித்துள்ளார்.
அந்த வகையில் அவ்வபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.