அமிர்தா ஐயர் என்ற பெயர் வேண்டுமானால் இங்கு பெரும்பாலோனோர் அறியப்படாமல் இருக்கலாம் ஆனால் அவரது முகம் அனைத்து இளைஞர்களால் அறியப்படும் ஒன்று. இவர் தமிழ் திரையுலகில் சில படங்களில் தன்னுடைய முழு திறமையையும் தன்னுடைய அழகையும் வெளிப்படுத்தி நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
இவர் 2019ஆம் ஆண்டு அட்லியின் இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் தென்றல் என்னும் கதாபாத்திரத்தில் ஃபுட்பால் டீமில் கேப்டனாக நடித்திருப்பார். மேலும் அதைத் தொடர்ந்து வெளிவந்த லிப்ட் மற்றும் வணக்கம் டா மாப்ள போன்ற படத்தில் மிகவும் பிரபலமானார்.
குறிப்பாக லிப்ட் திரைப்படத்தில் நடித்து பெரும்பாலான இளைஞர்களை கவர்ந்த நடிகை ஆவார்,இந்த திரைப்படத்தில் அவரது அழகு மெருகேற்றபட்டிருக்கும் என்பதால் ரசிகர்களிடையே வெகுவாக புகழ்ந்து பேசப்பட்டார்.இதை எல்லாம் தொடர்ந்து தற்போது மேலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார் அமிர்தா ஐயர்.
அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமிர்தா தற்பொழுது தான் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதுவும் தண்ணீரில் இல்லாமல் காபியில் குளிப்பதைப் போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது, அந்தப் புகைப்படத்திற்கு கீழ் இது ஒரு பெய்டு விளம்பரம் ஆகும் கஃபைன் மற்றும் விட்டமின் இ நிறைந்த காபியில் குளிப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகிப்பதை தவிர்க்கவும் என்று கேப்ஷனில் கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வெகுவாக கவரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.