ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அமீஷா படேல். இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம் ஏனெனில் அதன் பிறகு நமது நடிகைக்கு தமிழ் சினிமாவில் சொல்லும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் மற்ற மொழியில் பட வாய்ப்பானது கிடைத்துக் கொண்டே இருந்தது.
இதனால் வேற்று மொழிகளில் கவனம் செலுத்தி வந்த நமது நடிகை ஹிந்தியில் பிரபல நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்த நமது நடிகை சமீபத்தில் ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இவருடைய நடிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஷூட்டிங்கிற்காக ஏர்போர்ட்டிற்கு சென்ற நமது நடிகை புகைப்படம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புதியகீதை படத்தில் நடித்த நடிகையா இது என ஆட்சரியத்தில் உள்ளார்கள்.
ஏனெனில் நமது நடிகைக்கு தற்போது 45 வயதானாலும் என்றும் இளமையுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.