வயதான இயக்குனருக்கு ஜோடியாகும் அமலாபால்!! என்ன ஆச்சு இவங்களுக்கு..

amalapaul6
amalapaul6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவரின் நடிப்பு திறமையினால் நடிக்க ஆரம்பித்த சில காலகட்டத்திலேயே பிரபலமடைந்து விட்டார்.

இவர் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திருமணம்மான ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் அமலாபால் ஆடை போன்ற உச்சக்கட்ட கவர்ச்சி படங்களில் நடித்து வந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அவரின் மார்க்கெட் டல்லாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அமலாபால் வேர்ல்ட் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ள குட்டி ஸ்டோரி திரைப்படத்தில் ஒரு பகுதியில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

kuttystory-anthology
kuttystory-anthology