தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு மைனா திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் போன்ற இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற திரை உலகிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இவ்வாறு நல்ல பெயருடன் குடும்பப்பாங்கான திரைப்படத்தில் நடித்து வந்த இவர் ஆடை திரைப்படத்தில் உடை இல்லாமல் நடித்து சர்ச்சைக்குறிய நடிகையாக தற்பொழுது வரையிலும் வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து வெப்சிரியல் ஒன்றிலும் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்நிலையில் அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாவ்னிந்தர் சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் சிறிது காலம் கழித்து முற்றிலும் வதந்தி என்று உறுதியானது.
இந்நிலையில் அமலாபால் பேட்டி ஒன்றில் எனக்கும் ஏ எல் விஜய்க்கும் தொழில் மற்றும் மனரீதியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தான் விவாகரத்து செய்து கொண்டோம் என்றும் நாங்கள் இருவரும் பிரியும் பொழுது கூட என யாரும் ஆதரிக்கவில்லை என்கூட இருந்த அனைவருமே என்னை பயம்படுதினார்கள். நான் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் எனக்கு பயமாக தான் இருந்தது என்று அமலாபால் தன் மனதில் இருந்த வருத்தத்தை கூறியிருந்தார்.