நடிகர் விஷ்ணு விஷால் சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் கிராமத்து கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டார் போகப்போக வித்தியாசமான கதைப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்தவகையில் ராம்குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன்.
இந்த படம் விஷ்ணு விஷால் கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது. அதேபோல இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்த அமலா பாலுக்கும் முக்கிய படமாக இது இருந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷாலும் அமலாபாலும் மீண்டும் ஒருமுறை இணைந்து நடிக்க உள்ளனர் என்ற செய்தி கிடைத்துள்ளது.
சில்லுக் கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ஹலிதா சமீம். இவர் எப்பொழுது விஷ்ணு விஷால் மற்றும் அமலாபாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் இவர் ஏற்கனவே மின்மினி என்ற படத்தின் முதல் பாதியை எடுத்து வெற்றி கண்டுள்ளார் பீரியட் கதையில் உருவாகி வரும்.
இந்த படத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் இளைஞராக வரும் வரை காத்திருந்து ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த படத்தின் இரண்டாவது பாதியை இயக்குகிறார் இந்த படத்தில்தான் விஷ்ணு விஷாலும் அமலாபாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில்..

முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமலாபாலும் விஷ்ணுவிஷாலும் செம பொருத்தமான ஜோடி என்பதால் நிச்சயம் இந்தப் படமும் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைய உள்ளதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.