தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் விஜயசாந்தி மட்டுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார் ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவ்வாறு இவருடைய வெற்றியை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகைகளும் இதுபோன்ற திரை படத்தில் நடிப்பதற்கான ஆசை வந்துள்ளது. இதனை தொடர்ந்து திரிஷா, சமந்தா, தமன்னா போன்ற பலரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சையை உருவாக்கி விட்டார். என்னதான் சர்ச்சைகள் நிறைந்த திரைப்படமாக இருப்பினும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் சோலோ ஹீரோயினாக அமலாபால் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தினை அமலாபால் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது.
மேலும் இத்திரைப்படத்திற்கு காடவர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் இத்திரைப்படத்தில் நடிகை அமலாபால் பாரன்சிக் சர்ஜன் ஆக நடித்துள்ளாராம். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை அமலாபால் ஒரு மாத காலமாக மருத்துவமனையில் பயிற்சி பெற்றுள்ளார்.
அந்த வகையில் நடிகை அமலாபால் பிணங்கள் நிறைந்த அறையில் அமர்ந்துகொண்டு உணவு அருந்தும் படியான ஒரு காட்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுள்ளது.