தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன்பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து அவருக்கு தளபதி விஜய் நடிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து தலைவா திரைப்படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டியது மட்டும் இல்லாமல் இதன் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் நடிகை அமலாபால் வலம் வர ஆரம்பித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல கேரளாவில் குருவாயூர் கோவில் ஒன்று உள்ளது ஆனால் அந்த கோவிலில் மாற்ற மதத்தினர் நுழைவதற்கு அனுமதி கிடையாது அதேபோல கொச்சியில் உள்ள திருவயிராணி குளம் மகாதேவர் கோயிலிலும் மாற்று மதத்தினர் செல்வதற்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில் கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அமலாபால் இந்த விஷயம் கூட தெரியாமல் சாமி தரிசனம் செய்ய முயற்சிக்க சென்ற பொழுது அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். அப்பொழுது நடிகை அமலாபால் கோயில் நிர்வாக திட்டம் பல்வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் எவ்வளவு போராடியும் அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் ஏமாற்றமாடைந்தா நடிகை அமலாபால் கோவில் வாசலில் நின்று தரிசனம் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். அதுமட்டுமில்லாமல் பின்னர் சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார் அதாவது சாமானிய மனிதர்கள் அனைவரும் மனிதர்களை மனிதர்களாய் பார்க்காமல் மதத்தை மட்டுமே பார்த்து பழகி வருகிறார்கள் இவை கூடிய விரைவில் மாற வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவைராணி குளம் மகாதேவர் கோயில் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது அவர்கள் கூறியது என்னவென்றால் ஒரு சாமானிய மனிதனாக இருந்தால் அவர்கள் கோயிலுக்குள் வந்து செல்வது கண்டிப்பாக தெரிந்திருக்காது ஆனால் நீங்கள் மிகவும் பிரபலமானவர்கள் ஆகையால் நீங்கள் கோயிலுக்குள் வந்து சென்றால் கண்டிப்பாக அவை சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்தும்.
அது மட்டும் இல்லாமல் கோயில் நிர்வாகத்தை சரியாக பின்பற்றவில்லை என்ற கேள்விகளும் எழும்ப நேரிடும் இதனால்தான் அமலாபாலை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அமலா பால் மாற்று மதத்தவர் என்பது அவருக்கு தெரிந்த நிலையில் இப்படி அவர் அங்கு சென்று அவமதிக்கப்பட்டதால் பல ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.