ரெட்டை ஜடையில் சின்ன வயது பருவ மங்கை போல் அமலாபால்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

amala-paul-1
amala-paul-1

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை அமலா பால். தமிழில் இவரின் இரண்டாவது திரைப்படமான மைனா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தொடர்ந்து விஜய்,விக்ரம், தனுஷ், ஜெயம்ரவி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தார்

மிகவும் நன்றாக இவரின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் இயக்குனரான ஏ. எல். விஜய் அவர்களின் மீது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே முடிந்தது.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். பிறகு அமலாபால் தொடர்ந்து சினிமாவின் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

பிறகு வெப் சீரிஸ் மற்றும் திரைப்படம் என தொடர்ந்து பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அமலா பால் இருக்கு என்னதான் ஆனது என கூறி வருகிறார்கள்.

amala paul
amala paul

இப்படிப்பட்ட நிலையில் சோஷியல் மீடியாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர் நாள்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் குட்டையான உடையில் ரெட்டை சடைவுடன் பள்ளிப்பருவம் மாணவி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.