பொதுவாக சினிமாவில் நடிகைகள் என்றால் சிறந்த நடிப்பு திறமை இருந்தால் மட்டும் போதாது கவர்ச்சியும் மிக முக்கியமான ஒன்று.அந்த வகையில் அறிமுகமாகும் பொழுதே சர்சை நடிகையாக அறிமுகமாகி தற்போது வரையிலும் சர்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால்.
இவர் இந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்குப் பிறகு விஜய், சூர்யா, விக்ரம் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு கமர்ஷியல் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் வெளிவந்த ஒரு திரைப்படம் தான் அம்மா கணக்கு இவ்வாறு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஆடை என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் 16 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதோடு சில வெப் சீரியல்களிலும் மிகவும் ஆபாசமாக நடிப்பதை தொடர்ந்ததால் தற்பொழுது ரசிகர்கள் பலரும் இவரை திட்டி வருகிறார்கள். இருந்தாலும் அமலா பால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கடலில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விமர்சன படுத்தப்பட்டது. இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமலாபால் முதலில் பெண்களை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரின் விருப்பம் அது அவரின் தேர்வு இதில் மூன்றாவது நபர் ஒருவர் தலையிட்டு இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் கூறக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.