Amala paul net worth: நடிகை அமலாபால் இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவின் மூலம் நடிக்க தொடங்கிய அமலாபால் தற்பொழுது வரையிலும் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக கடாவர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்தவரும் அமலா பால் 1991ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். மாடலிங்கில் மிகவும் ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அப்படி 2009இல் நீல தாமரா என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இதன் மூலம் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்திருந்தார் முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கிய இவருக்கு மைனா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் நல்ல வெற்றியை தர தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அமலாபால் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட திரைப்படங்களின் அமலாபால் நடித்திருந்தார். இதன் மூலம் இவர்களுக்கு காதல் ஏற்பட 2014ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமண வாழ்க்கை சரியாக செட் ஆகாத காரணத்தினால் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து அமலாபால் திரைப்படங்களில் நடித்து ஈசியாக இருந்து வருகிறார். அப்படி தற்பொழுது பிரித்திவிராஜ் உடன் இணைந்து ஆடுஜீவிதம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மலையாளத்திலும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிப்பதற்காக சுமார் 2 கோடி வரை அமலா பால் சம்பளம் வாங்கி வருகிறாராம். இவ்வாறு 32 வயதில் 32 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரி ஆக அமலா பால் இருப்பதாக கூறப்படுகிறது.