actress amala paul latest speech: தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அமலாபல். சமீபத்தில் இணையத்தில் மிக கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு வரும் அமலாபால் தற்சமயம் ஆண்களை பற்றி தாறுமாறாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அமலாபால் முதலில் மலையாள திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார். மேலும் இவர் மலையாளத்தில் நடித்த முதல் திரைப்படமே கிளாமர் திரைப்படமும் போல இருப்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் இடம் பிடித்துவிட்டார்.
ஆனால் தமிழ் சினிமா அவரை முழுமையாக மைனா திரைப்படத்தின் மூலமாக மாற்றிவிட்டது. அதன்பிறகு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் மிக சிறந்த நடிகையாக போற்றப்பட்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் பொழுது ஒரு இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு இணங்க இவர்களுடைய திருமணம் ஆனா ஒரு வருடத்திலேயே பிரிந்து விட்டார்கள். இவ்வாறு இவர்களும் பிரிந்து இருந்த நிலையில் அமலாபாலின் மாமனார் அமலாபால் உடைய கேரக்டர் சரியில்லை என பல பேட்டிகளில் அவரை பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
இந்நிலையில் பிரபல பாடகர் ஒருவரை அமலாபால் காதலித்து வருவதாகவும் லிவிங் டுகெதர் முறைப்படி அவருடன் வாழ்ந்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு உதட்டு முத்தத்தில் ஈடுபட்டது போல புகைப்படங்கள் வெளிவந்தன. இவ்வாறு வெளிவந்த புகைப்படம் வைரலாக பரவிய நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.
இந்நிலையில் அமலாபால் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஆண்களுடைய படுக்கையை பகிர பெண்கள் உபயோக படுகிறார்கள். ஏனெனில் இந்த ஊரடங்கு நேரத்தில் கர்ப்பமான பெண்களின் எண்ணிக்கையானது 7 மில்லியனை கடந்து விட்டது என குறிப்பிட்டிருந்தார்.
கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் அமலாபால் கூறிய கருத்திற்கு என்ன சம்பந்தம் என கோலிவுட் வட்டாரம் அவரை கண்டமேனிக்கு விளாசி வருகிறார்கள். இவ்வாறு இவர் பேசியதை பார்த்தால் தமிழ் சினிமாவில் இவருக்கு இடம் கிடைக்காத காரணத்தினால் தான் இவர் இவ்வாறு பேசுகிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.