நடிகை அமலாபாலுக்கு இந்த நடிகர் மீது ரொம்ப “க்ரஷ்”..! யார் அது தெரியுமா..

amalapual
amalapual

சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால். இவர் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்தார். இதனால் இவருக்கு ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

நடிகை அமலாபால் நடித்த மைனா, தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, ராட்சசன் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் இருந்தது.  சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு சருக்களை  ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இவருக்கு பெருமளவு சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை அமலா பால் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான வேலைகளை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தான் விஜய் டிவி தொலைக்காட்சியில் ராஜு வீட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சி தற்போது சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமலா பால் கலந்து கொள்கிறார் அதன் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அப்பொழுது அவரிடம் உங்களுக்கு எந்த நடிகர் மீது க்ரிஷ் என கேட்டு உள்ளனர்.

அதற்கு பள்ளிக்காலத்தில் இருந்தே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் என பேசினார். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆகாத இருக்கும் நடிகர்கள் யாரையாவது கூறுங்கள் என கேட்க எஸ் டி ஆர் பிடிக்கும் என அவர் கூறி உள்ளார் அதன் வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.