ஹீரோயிசத்தை மாற்றி அமைத்தவர் அஜித்.! மத்த நடிகர்கள் பாத்து கத்துக்கணும்

Ajith
Ajith

Ajith : 30 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று 230 கோடி வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஒரு படம் பண்ண உள்ளார் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாவது பாதி சிறப்பாக இல்லாததால் அவரை நீக்கி விட்டு வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டது அப்படி மகிழ் திருமேனி சொன்ன கதை ரொம்ப பிடித்த போகவே விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் படம் டிராப் ஆகிவிட்டது என பலரும் கமெண்ட் அடித்தனர் இந்த நிலையில் தான் சுபாஷ்கரன் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார் அப்பொழுது விடாமுயற்சி எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்ட்  வெகு விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என கூறினார்.

அதுபோல இந்த மாதம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து அடுத்த வருடம் ஜனவரியில் சூட்டிங் முடியும் என கூறப்படுகிறது படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் துபாய் மற்றும் அபுதாபியில் தான் எடுக்கப்படுகிறது விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இது தவிர ஹீமா குரேஷி, அர்ஜுன், அர்ஜுன் தாஸ் போன்றவர்களும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் அஜித் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஹீரோயிசத்தை மாற்றி அதை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றவர் அஜித் எனக்கு ரசிகர்கள் மன்றம் வேண்டாம் என்னை யாரும்  தல என கூப்பிட வேண்டாம்..

ஏகே அல்லது அஜித்குமார் என கூப்பிடுங்கள் என கூறினார் இதை வேற எந்த நடிகரும் சொல்ல மாட்டாங்க.. ஒரு படம் 100 கோடி வசூல் செய்தாலே எனக்கு காவடி தூக்கு பேனர் ஒட்டு அத பண்ணு இதப்பண்ணுன்னு சொல்றாங்க ஆனால் அஜித் என்னுடைய படத்தை நல்லா இருந்த பாருங்க மட்டும் தான் சொல்றாரு..

இவ்ளோ பெரிய நடிகர் லைன்ல தான் நிப்பாரு..  12 பேத்துக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கிறார் பல உதவிகள் செய்திருக்கிறார். இந்த பட்டத்திற்கும் ஆசைப்பட்டது கிடையாது யாரைப் பற்றியும் தப்பா பேசியது கிடையாது  என பேசி உள்ளார்.