தமிழ் சினிமாவில் நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இத்திரைப்படத்தில் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் அடக்க ஒடுக்கமாக சிறப்பாக நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து திரைப் படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா ஆனந்துடன் இணைந்து மகத்துடன் நட்பாக பழகி ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தற்போது கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேக்கா போன்ற திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திரைப்பட வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டார். அந்த வகையில் தற்போது இவர் சூப்பர் உமன் போல் உடையணிந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் மீரா டப் கொடுப்பார் போல என கூறுகின்றனர். மேலும் பட வாய்ப்பு இருக்கும் போது கூட இப்படியா எனவும் பலர் திட்டியும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.