நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளராக டான்ஸராக தனது பயணத்தை தொடங்கி பின்பு ஒரு கட்டத்தில் சினிமாவில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் படிப்படியாக முன்னேறி கனா, காக்கா முட்டை, வடசென்னை போன்ற சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டார்.
மேலும் காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். இந்த படங்களை தொடர்ந்து தமிழில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து பல திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு..
தமிழை தாண்டி மலையாளம் தெலுங்கு போன்ற மொழி வாய்ப்புகளும் கிடைக்கின்றன அதனால் அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனை நாம் பலருக்கும் தெரியும் இவர் ஒரு சீரியல் நடிகர். அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர்.
இவரது மனைவி சோபியாவும் டான்சர் ஆவார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் டான்சராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் பின்பு மணிகண்டன் மற்றும் சோபியா இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த நிலையில் ஜீ தமிழில் சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வரும்..
நிகழ்ச்சி சூப்பர் மாம் இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. சூப்பர் மாம் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்த செய்தியை தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.