தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தாலும் பருவ வயதை எட்டிய பிறகு இவருக்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, மானாட மாயிலாட மற்றும் ஒரு சில நிகழ்ச்சியில்..
தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் கலந்து கொண்டு அசத்தினார். பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றி வந்த இவர் போகபோக நல்ல கதா பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அட்டகத்தி, ரம்மி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெயரை வாங்கினார் அதன் பிறகு ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும்..
தன்னை நம்பி வருகின்ற எந்த ஒரு கதாபாத்திரத்தையும் விடாமல் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இதனால் என்னவோ அவருக்கு வருடத்தில் 5, 6 படங்கள் ஈசியாக கிடைத்து விடுகின்றன. அந்த வகையில் 2023 – ல் மட்டும் மோகன்தாஸ், தீயவர் கொலை நடுங்க, புலிமடா, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம்..
மற்றும் மலையாளத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் அதிகரித்து உள்ளது. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
அதுபோல தற்போதும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் வித்தியாசம் வித்தியாசமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வர வர நீங்க கவர்ச்சி பக்கம் தாவுறது போல தெரிகிறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..