தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் அவர் வேறு யாரும் கிடையாது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரமாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இந்த போஸ்டர்கள் அனைத்தும் சர்ச்சைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.
என்னதான் இந்த போஸ்டர்கள் பல்வேறு சர்ச்சைக்கு ஆனாலும் வரவேற்பு மட்டும் குறையவில்லை அந்த வகையில் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் கை கோர்க்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவில் விஜய் பிடித்த நடிகைகள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் இந்த லிஸ்டில் பல்வேறு முன்னணி நடிகைகள் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த தகவலின் படி ரசிகர்கள் பலரும் அடுத்த படத்திற்கு அடி போடுகிறீர்களா என ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
