தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பதற்காக படங்கள் வரிசை கட்டி நிற்கிறது அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் தோல்வியினை சந்தித்த நிலையில் தற்பொழுது ஒரு படத்திற்கு மட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒன்றரை கோடி வரை சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியினை சந்தித்த நிலையில் ஆனால் திடீரென ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு சம்பளத்தை உயர்த்தி உள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ட்ரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மொத்தமாக சேர்த்து 10 லட்சம் தான் வந்துள்ளது. எனவே அந்த படத்தின் போஸ்டர் செலவுக்கு கூட பத்தாது எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் தற்போது திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இவருடைய பெண் கால்சி ஓட்டுனராக நடித்திருந்தது சமூக வலைதளங்களில் கலவை விமர்சனத்தை பெற்றது.
மேலும் இந்த படத்தினை பார்க்க முதல் நாள் கூட பெரிதாக யாரும் வரவில்லை எனவே தியேட்டர் காலியாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் பட குழுவினர்கள் சக்சஸ் மீட்டிங் என்று விழா ஒன்றை நடத்தி கொண்டாடினார். இதனை அடுத்து ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் தி கிரேட் இந்தியன் கிச்சன் இந்த படமும் படம் தோல்வியை பெற்றது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குடும்பத்தில் பெண்களின் உழைப்பை எந்த அளவிற்கு சுரண்டுகிறார்கள் என்பதனை நடித்து வெளிப்படுத்தினார். இவ்வாறு தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை நடித்து வரும் இவர் தற்பொழுது இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இயக்கம் சொப்பன சுந்தரி என்ற படத்தில் காமெடி கலந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பற்றிய போஸ்டர்கள் வெளியான நிலையில் மேலும் சம்பள விஷயத்தில் மிகவும் காரமாக இருப்பதாக கூறப்படுகிறது.