விஜயுடன் ஜோடி சேர மறுத்த நடிகை ஐஸ்வர்யா ராய்.? சொன்ன பதிலால் ஆட்டம் கண்ட படக்குழு

aishwarya-rai
aishwarya-rai

சினிமா உலகில் மாடல் அழகிகள் தான் அதிகம் ஆட்சி செய்கிறார்கள் அந்த வகையில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 90 கால கட்டங்களில் இந்தியாவையே தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார் என சொல்லலாம் அந்த அளவிற்கு பல மொழி உங்களில் நடித்து பிரபலமடைந்திருந்தார் இப்படிப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன், ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் இதனால் சில வருடங்கள் சினிமா பக்கமே தென்படாத இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.   12 வருடங்களுக்கு பிறகு தமிழில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்தார்.

முதல் பாகத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதிலும் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் மிரட்டு  என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலைமையில் ஐஸ்வர்யா ராய் விஜய் பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்துள்ள செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ரிலீசான திரைப்படம் தமிழன்.. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார் ஆனால் முதலில் ஹீரோயின்னாக நடிக்க வேண்டியது ஐஸ்வர்யா ராய் தான். அவர் மறுத்துவிட்டார். அவர் சொன்ன பதில் என்னவென்றால்.. விஜய் என்னை விட வயதில் சிறியவராக தெரிவார் ஆதனால் அவருக்கு நான் ஜோடியாக நடித்தால் செட் ஆகாது அஜித் ஹீரோவாக நடிச்சா நான் ஜோடியாக நடிக்க ரெடி என சொல்லி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயிடமிருந்து இந்த பதில் வந்ததால் தமிழன் படத்தின் தயாரிப்பாளர்  அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர மறுத்ததும் உலக அழகி பட்டம் பெற்ற வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டது படக்குழு அதன்படி 2000 ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவை தமிழன் படத்தில் நடிக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக படத்தில் சேர்த்தது.