தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாயும்புலி, ஆச்சாரம், ஆறுவது சினம் ,சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம், போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகி திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துள்ளார் அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் போட்டியில் நமது நடிகை கடைசி வரை சென்று ரன்னர் அப் என்ற இடத்தை பெற்றது மட்டுமில்லாமல் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக உருவாகிவிட்டது. இதன் மூலமாக பல்வேறு இயக்குனர்களும் நமது நடிகையை வைத்து திரைப்படம் இயக்க முன் வந்து விட்டார்கள்.
அந்தவகையில் பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், கூட அவன், பப்ஜி, கெட்டவனுக்கு போராடும் நல்லவன்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நமது நடிகை கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பிக்பாஸ் ஆரி உடன் இணைந்து அலேக்கா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நமது நடிகை திரைப்படத்திற்கு தகுந்தார் போல தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய உடல் எடையை 13 கிலோ குறைத்து பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எந்த ஒரு திரைப்படமும் இவருடைய நடிப்பில் வெளியாகவில்லை.
அந்த வகையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் வரும் நமது நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் என ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது பொதுவாக நடிகைகள் இவ்வாறு புகைப்படம் வெளியிடுவது எப்படியாவது இயக்குனர்கள் நம்மளை திரைப்படம் நடிக்க அழைக்க மாட்டார்களா என்ற காரணத்திற்காகத்தான்.