மாடல் அழகிகள் பலரும் வெள்ளி திரையில் கால் பத்திகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் உலக அழகிய பட்டம் பெற்ற பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது குறிப்பாக ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கைப்பற்றி அங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஒரு கட்டத்தில் பிற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் முதலில் இருவர் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் திடீரென ஹிந்தியில் டாப் ஹீரோவாக வலம் வந்த அமிதாப் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார் கடைசியாக இவர் தமிழில் வந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருகின்ற நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது அவருக்கு மொத்தம் ஐந்து மொழி தெரியுமாம் அது அவருடைய சொந்த மொழி என்னை என்பது குறித்தும் பார்க்க இருக்கிறோம் ஐஸ்வர்யாராய் இளம் வயதில் பேட்டி ஒன்றில் தனக்கு ஐந்து மொழி தெரியும் என கூறியுள்ளார்.
ஹிந்தி, மராத்தி, தமிழ், துளு (தாய்மொழி), ஆங்கிலம் என மொத்தம் ஐந்து மொழி தெரியும் அவருடைய தாய் மொழி துளு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து பரப்பி வருகின்றனர்.