இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன் அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கடந்த 11ஆம் தேதி கொரானா உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவே அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவரைத் தொடர்ந்து அமிதாப் பச்சனின் மனைவி விஜயா பச்சன் மற்றும் இவருடைய மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் இவருடைய மகள் ஆரத்யா அவர்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்பொழுது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆரத்தியா ஆகியோர் வீட்டிலிருந்து நானா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் தற்பொழுது பல முன்னணி நடிகர்கள் உடல்நிலை குறைபாட்டால் இறந்துள்ளார்கள். அந்த வகையில் அமிதாப் பச்சன்,அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் அவர்களின் ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.