தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இதனைத் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2, வீரா, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது இவருக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஐஸ்வர்யா மேனன் தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் சமீபத்தில் அவர் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டைட்டான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கு தப்பான கருத்துகளைத் தெரிவித்து அவரை வர்ணித்தும் வருகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.!