நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் கூட இருந்தே துரோகம் செய்த நபர் !! பதிலுக்கு அவர் செய்த செயல்..

aishwariya rajesh 01
aishwariya rajesh 01

அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல கிராமத்து படங்களில் நடித்து சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

சொல்லப்போனால் இத்திரைப்படம் தான் இவருக்கு சினிமாவில் ஒரு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த கானா,பன்னையாரும் பத்மினியும், அட்டகத்தி, வட சென்னை போன்ற திரைப்படங்களில் தன சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக கா/பே ரனசிங்கம் திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீப காலங்களாக நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாகவும் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் திரைப்படமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் கா/பே ரணசிங்கம் திரைப்படத்தின் பொழுது பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.

அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் உரிமையாளராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தாராம் எனவே ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நபரை முழுக்க முழுக்க நம்புவார். அதாவது அந்த உரிமையாளர் பலரிடமும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய அப்டேட்களை கூறுவது மற்றும் இவரின் லாக்கர் நம்பர்களை பலரிடமும் தெரியப்படுத்துவது என்று பலவற்றையும் செய்து வந்தாராம்.

எனவே இதனை அறிந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நபரை பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அறிந்த பலரும் அவரை ஐஸ்வரியா ராஜேஷிடம் அந்த நபரின் மீது போலீசில் புகார் அளிக்க கூறி உள்ளார்கள். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்றும் நேர்மை தவறாது நம்பகமாக இருக்கட்டும் என்று கூறினாராம்.