தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து ஓரளவிற்கு வெற்றியை பெற்று வருகிறது. எனவே தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படம் தயாரிக்க விரும்புகிறார்கள்.
நயன்தாரா,திரிஷாவைவிடவே ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகபடியான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா இருந்தாலும் திரிஷாவாக இருந்தாலும் அசல் கிராமத்து பெண்ணாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி கிடையாது எந்த கேரக்டராக இருந்தாலும் அதனை உள்வாங்கி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார்.
இதன் காரணமாகத்தான் தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே தொடர்ந்து 6 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்தவகையில் சமூகத்திற்கு நல்ல கருத்தை தரும் திரைப்படம் தான் பூமிகா இந்த திரைப்படத்தின் கதையை பற்றி பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கிவுள்ளது. அந்த வகையில் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படத்தை ஓடிடி வழியாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
பூமிகா என்ற பெயர் பூமியைக் குறிக்கும். அந்த வகையில் டைட்டிலுக்கு எற்றதுபோலவே கதையையும் அமைத்துள்ளார்கள். மனிதர்கள் இயற்கையை அழித்து வருகிறார்கள். அந்த இயற்கை மனிதர்களை பழி வாங்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்துதான் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.