கிராமத்துப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தற்போது கவர்ச்சியில் அதிக ஆர்வமுடையவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.பொதுவாக ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகமாக மேக்கப் போட்டு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களை மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் மேக்கப் போடாமல் தனது சாதாரண அழகினால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் முதலில் இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள, திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார். ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கண்டிப்பாக கிராமத்து அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் கடினமான ஒன்று பெரும்பாலான நடிகைகள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு வளர்ந்துள்ள இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து பிஸியாக இருந்து வருகிறார்.இவர் நடிப்பில் கடைசியாக கா/பே ரணசிங்கம் திரைபடத்தில் கிராமத்து பெண்ணாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இத்திரைப்படம் சாதிக்க முடியும் என்கின்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட இருந்தது.ஓடிடி வழியாக இத்திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 7 திரைப்படங்களில் வெளியாக உள்ளது. அந்த வகையில் தமிழில் 4 தெலுங்கில் 3 என தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களாகவும், ஒரு பெண்ணால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை வைத்தும் உருவாக உள்ளது. அந்த வகையில் பூமிகா, திட்டமிட்டு 2,டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் என தமிழிலும் ரிபப்ளிக், டிரக், ஜகதீஸ், அய்யாப்பாவும் கவுசியும் ரீமேக்கில் நடித்து வருகிறார்.