தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் பிறகு இவருடைய மார்க்கெட்டே எகிறி விட்டது. அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளும் இவருக்கு குவிந்து கொண்டே வருகிறது.
அந்த வகையில் இவர் சோலோ ஹீரோயினாக நடித்த பல்வேறு திரைப்படங்களும் மெகா ஹிட்டடித்து விட்டது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் கமர்சியலுக்கு இடம் கொடுக்காதது தான் இவருடைய வெற்றிக்கு காரணம் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தன்னுடைய 25வது திரைப்படத்தை மிக விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார் நமது ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்திற்கு பெயர்கூட பூமிகா என வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்தான் தயாரித்துள்ளாராம்.
இவ்வாறு தன்னுடைய 25வது திரைப்படத்தை பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்து நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் தலையில் மண்ணை வாரி போட்டது போல ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவர் நடித்த இந்த திரைப்படமானது தியேட்டரில் வெளிவராமல் டிவியில் வெளியாக உள்ளதாம்.
சமீபகாலமாக தியேட்டர்கள் திறக்கப்படாததன் காரணத்தால் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் கூட இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
இந்நிலையில் தற்போது நடித்த இந்த திரைப்படமானது ஐஸ்வர்யா ராஜேஷ் தலையில் மண்ணை வாரி போட்டது போல தொலைக்காட்சிகள் வெளியிட உள்ளார்கள் இவ்வாறு வெளி வந்த செய்தியின் மூலம் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.