தற்போதெல்லாம் ஏராளமான நடிகைகள் எப்படி எல்லாம் நடித்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முடியும் என்றும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்றும் தெளிவாக கற்றுக்கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தொடர்ந்து மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை பார்வதி இவர் பெரும்பாலும் கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருப்பார்.
இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மலையாளத் திரைப்படத்தில் தான் அவருக்கு என்று ஒரு தனி அந்தஸ்து கிடைத்தது மலையாளத்தில் இவர் எப்படி தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாறோ அதேபோல் தமிழில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வமுடையவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவ்வாறு இந்த முன்னணி நடிகைகள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.அதாவது மலையாளத்தில் பெண்களின் உரிமையை மையமாக வைத்து உருவாகும் ஹெர்-அவளுக்காக என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இவர்களுடன் ரம்யா நம்பீசன்,ஊர்வசி லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர்கள் நடித்து வருகின்றனர். இவ்வாறு நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் இத்திரைப்படத்தினை லிஜின் ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
மேலும் அர்ச்சனா வாசுதேவன் என்பவர் கதை எழுதியுள்ளார்.96 புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவ்வாறு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கூட்டணியில் வெளிவந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தினை தொடர்ந்து மீண்டும் இரண்டு முன்னணி நடிகைகளின் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.