பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவது. இந்நிலையில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் மணிரத்தினம் செதுக்கியிருந்த நிலையில் அனைவரும் மக்கள் மத்தியில் நீங்காயிடம் பிடித்துள்ளனர். அப்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் இதனை அடுத்து இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை.
இருந்தாலும் இந்த படத்தில் அமைந்திருந்த காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இவ்வாறு இந்த படத்தில் இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மிக சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எனவே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது இவ்வாறு பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து சமீப பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேரளாவை சேர்ந்தவர் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆசையே கிடையாதாம் எனவே நடிப்பதற்கான வாய்ப்பு தேடி அலைந்ததே இல்லையாம். மேலும் விதவிதமான உணவுகளை தேடிச்சென்று ஹோட்டலில் சாப்பிடுவாராம். அப்படி எம்பிபிஎஸ் படித்து கொண்டிருக்கும் பொழுது கடைசி வருடத்தில் ஹோட்டலுக்கு அடிக்கடி சென்று சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அப்படி தான் அங்கு படத்திற்கு ஆட்கள் தேர்வு செய்து வந்துள்ளனர். அப்படி நண்பர்களுடன் இருக்கும் பொழுது விளையாட்டாக பேசிக்கொண்டு அதில் கலந்துக் கொண்டேன் போன வேகத்தில் என்னை தேர்ந்தெடுத்து விட்டனர். அப்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது சினிமாவில் நடிக்க பல பேர் போராடி முயற்சிகள் செய்து வருகின்றனர் நமக்கு இப்படி ஈஸியாக கிடைக்கிறது என்று கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டேன்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு சாப்பிடுவதிலும் கரெக்டாக இருந்து கொண்டு இன்றுவரை நிறைய படங்கள் நடித்து வருகிறேன் மணிரத்தினம் சார் கூப்பிட்டு வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து உள்ளேன் என்பது பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.