வாரிசு நடிகை ஒருவர் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு வேறு ஒரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து தகவலை பேட்டி ஒன்றில் கூறிய நிலையில் அந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவரவர்களுடைய விருப்பம் பலரும் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தானவர்கள் இருக்கிறார்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருபவர்களும் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த அடவிலோ அபிமன்யுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த இவர் ஞாபகங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்வீர் அகமது என்பவரை 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 1995ஆம் ஆண்டு இந்த தம்பதியினர்களுக்கு மகள் பிறந்தார் ஆனால் இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டே விவாகரத்து செய்து செய்து கொண்டனர். விவாகரத்திற்கு பிறகு தன்வீர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் அம்மா, அக்கா, அண்ணி என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து ஒரு கட்டத்தில் சீரியலிலும் நடக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் இவருக்கு சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாமல் வீடு வீடாக சென்று சோப்பு விற்பனை செய்தார் சினிமா வாய்ப்புகள் இருந்தால் தர வேண்டும் என பலருக்கும் கோரிக்கை வைத்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் சமீப ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியவர் தனது முன்னாள் கணவர் இரண்டாவது திருமணம் செய்ததில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று கூறி ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பிறகு நானும் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் ஆனால் அந்த உறவு நீண்ட நாள் நீடிக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன் விவாகரத்திற்கு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.