தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவருமே குடும்ப குத்து விளக்காக அறிமுகமாகி பிறகு கவர்ச்சி தாராளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீப காலமாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் பொதுவாக பெண்களை மையமாக வைத்து குடும்ப பாங்கான கதை உள்ள திரைப்படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதன் காரணத்தினாலேயே ரசிகர் பலருக்கு இவரை பிடித்திருந்தது. ஆனால் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்களின் பெரும் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கிய பிறகு பல எதிர்ப்புகளை தாண்டி தனது விடா முயற்சியினால் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மனைவி,அம்மா, தங்கச்சி போன்ற கேரக்டர்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இவர் தொடர்ந்து பல படங்களில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறை என்பதால் மாலத்தீவு சென்று அவ்வப்போது எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது மிகவும் ஸ்டைலாக பீச் ஓரத்தில் கால் மேல் கால் போட்டு குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.